சென்னை: ஒரே ஒரு படம் ஹிட்டானதால், ஒரு கோடி மதிப்புள்ள சொகுசு கார் ஒன்றை வாங்கியுள்ளார் ஹீரோயின்.
இந்தியில், முன்னா மைக்கேல் என்ற படம் மூலம் ஹீரோயினாக அறிமுகமானவர் நிதி அகர்வால். பின்னர் தெலுங்குக்கு வந்த இவர், சவ்யாசாச்சி, மிஸ்டர் மஞ்சு ஆகிய படங்களில் நடித்தார்.
இந்தப் படங்களில் பெரிய ஹிட்டாகவில்லை. அடுத்து, ஐஸ்மார்ட் சங்கர் என்ற படத்தில் நடித்தார். ராம், ரபா நடேஷ், நிதி அகர்வால் உட்பட பலர் நடித்திருந்த இந்தப் படம் சூப்பர் ஹிட்டானது.
புரி ஜெகநாத் இயக்கியிருந்தார். அவரும் நடிகை சார்மியும் இணைந்து தயாரித்திருந்தனர். இதையடுத்து இப்போது, ரோமியோ ஜூலியட், போகன் படங்களை இயக்கிய லட்சுமண் இயக்கும் 'பூமி' படத்தில் நடித்து வருகிறார்.
இதில் ஜெயம் ரவி ஹீரோவாக நடித்து வருகிறார். இது அவரது 25-வது படம். டி.இமான் இசை அமைக்கிறார். இந்நிலையில், நடிகை நிதி அகர்வால், போர்ச்சே (Porsche) சொகுசு காரை வாங்கியுள்ளார். இந்த காரின் மதிப்பு ரூ.1 கோடி.
இயக்குனர் புரி ஜெகநாத், லேண்ட் ரோவர் காரும் தயாரிப்பாளர் சார்மி ஆடி காரும் வாங்கியிருந்தனர். இப்போது நிதி அகர்வால் இந்த காரை வாங்கியுள்ளார். 'ஒரு படத்தோட ஹிட், ஒருவரின் வாழ்க்கையை எப்படி மாற்றுது பாருங்க' என்கிறார்கள் டோலிவுட்டில்.